
பனீர் ரோல்
சைவம்வீட்டில் தயாரித்த பனீரை மைதா, மக்காச்சோள மாவு, வதக்கிய காய்கறிகளுடன் பிசைந்து ரோல் வடிவில் பொன்னிறமாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்ரோல் வகைகள்
பொருட்கள்
- 1 லிட்டர் பனீர் (பாலில் செய்தது)
- 2 வெங்காயம்
- 2 குடமிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 6 ரொட்டி துண்டுகள்
- 1/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
- 1 டீஸ்பூன் நசுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- 2 டீஸ்பூன் மைதா மாவு
- 2 டீஸ்பூன் மக்காச்சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் மெல்லிய ரவை
- 1 டீஸ்பூன் தனியா பொடி
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை
- எண்ணெய் (தேவையான அளவு, பொரிக்க)
செய்முறை
- பனீர் (திரிந்த பால்): பாலைக் காய்ச்சி எலுமிச்சை ரசம் சேர்க்கவும். திரிந்தவுடன் ஒரு துணியால் வடிகட்டி ஒரு மணி நேரம் தொங்க விடவும். கையினால் உதிர்த்து உபயோகப் படுத்தவும்.
- வெங்காயத்தையும், குடமிளகாயையும் பொடியாக அரிந்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி வெங்காயத்தையும், குடமிளகாயையும் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- திரித்த பாலை உதிர்த்துக் கொள்ளவும். இதோடு மைதா, மக்காச்சோள மாவு சேர்த்து கெட்டியான மாவாகப் பிசையவும்.
- இதோடு வதக்கிய காய்கறிகள், மிளகாய் விழுது, உப்பு, மிளகாய்த் தூள், தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.
- ரொட்டித் துண்டங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீரில் முக்கி எடுத்து கெட்டியாகப் பிழியவும். இதையும் கலந்த மாவோடு சேர்த்துப் பிசையவும்.
- எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்து, பிறகு நீளவாக்கில் உருட்டவும் (ஜாமூன் போல). செய்து முடித்ததும் ரவையில் புரட்டி எடுத்து 1/2 மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் (Refrigerator Compartment) வைக்கவும்.
- இளம் சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.