பக்கடா
பக்கடா
வகைகள்பொரித்த பலகாரம்
பொருட்கள்
- 400 கி. கடலை மாவு
- 100 கி. அரிசி மாவு
- 1 கரண்டி நெய்
- 1 கரண்டி எண்ணெய்
- 25 கிராம் முந்திரிப்பருப்பு
- 4 பல் பூண்டு
- சுடுவதற்கு எண்ணெய்
- 100 கிராம் வெங்காயம்
- 8 பச்சை மிளகாய்
- சிறு துண்டு இஞ்சி
- சிறிது சோடா உப்பு
- கருவேப்பிலை
செய்முறை
- ஒரு தாம்பாளத்தில் வெட்டிய வெங்காயம், மிளகாய், பூண்டு, இஞ்சி, நெய், எண்ணெய், உப்பு, சோடா உப்பு, போட்டு நுரைக்கத் தேய்த்து, பின் இரண்டு மாவு, முந்திரிப்பருப்பு போட்டு சிறு தண்ணீர் சேர்த்துத் தேய்த்து, கெட்டியாகப் பிசைந்து, எண்ணெயில் உதிர்த்து விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.