பால் பணியாரம்
பால் பணியாரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 100 கிராம் பச்சரிசி
- 75 கிராம் உளுந்து
- 200 கிராம் பசும்பால்
- ஒரு டம்ளர் தேங்காய் பால்
- 100 கிராம் சர்க்கரை
- சிறிதளவு ஏலக்காய் பொடி
- தேவையான அளவு பொரிக்க (எண்ணெய்)
செய்முறை
- பச்சரிசியையும், உளுந்தையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைக்கவும். இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். வெள்ளை நிறமாக பொறித்து எடுக்கவும். பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும். சுவையான பால் பணியாரம் ரெடி!
- பால் செய்முறை: பசும் பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.