
பாலக் மெதுபக்கோடா
சைவம்நுரைத்த பாசிப்பருப்பு மாவை பசலைக்கீரை, வெங்காயத்துடன் கலந்து இலேசான பக்கோடாவாக பொரிக்கப்படும் மெதுபக்கோடா.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 கப் பாசிப் பருப்பு
- 3/4 கப் நறுக்கிய பசலைக்கீரை
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 சிட்டிகை பேகிங் பவுடர்
- தேவைக்கேற்ப உப்பு
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- பருப்பைக் கழுவி முழுகும்வரை தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு நுரைக்க வடைமாவு போல அரைத்துக் கொண்டு உப்பைச் சேர்த்து கடைசியில் அரைக்கவும்.
- இதோடு நறுக்கிய கீரை, மிளகாய், வெங்காயம், பேகிங் பவுடர் சேர்க்கவும். கைகளினால் லேசாகக் கலந்துவிடவும்.
- சூடான எண்ணெயில் ஈரக் கைகளால் அல்லது ஒரு ஸ்பூன் உதவியால் சிறிய உருண்டைகளாகப் போடவும்.
- பொன்னிறமானதும் எடுத்து நன்றாக எண்ணெயை வடியவிட்டு சூடாகப் பரிமாறவும்.
- மாற்று செய்முறை: (1) வேறு எந்த கீரையும் உபயோகப்படுத்தி இதே போல பக்கோடா செய்யலாம். (2) இஞ்சி, பச்சை மிளகாய் விழுதாக அரைத்து மாவில் கீரையோடு சேர்த்துக் கொள்ளலாம்.