வெங்காயப் பஜ்ஜி-இன் புகைப்படம், தேங்காய் சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

வெங்காயப் பஜ்ஜி

சைவம்

வெங்காய வளையங்களை மசாலா கடலைமாவு-அரிசிமாவு மாவில் தோய்த்து முழுவதுமாக பொன்னிறமாக பொரிக்கப்படும் வெங்காயப் பஜ்ஜி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 2 சிட்டிகை சமையல் சோடா
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 6 (அ) 7 வெங்காயம்

செய்முறை

  1. ஒரே மாதிரி அளவுள்ள சுமாரான சைசில் உள்ள வெங்காயத்தை எடுத்துக்கொண்டு, தோலெடுத்து மெல்லிய வட்டங்களாக குறுக்கில் அரிந்து கொள்ளவும்.
  2. இதழ்கள் பிரிந்து வராமலிருக்கும்படி ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.
  3. மாவு வகைகளை சலித்து உப்பு, மிளகாய்த் தூள், சோடா சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு இட்லி மாவைப் போன்ற பக்குவத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியில் முக்கால்பாகம் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  5. எண்ணெய் சூடானதும் வெங்காயத்தை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் கொள்ளுமளவிற்கு போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  6. பொரித்த பஜ்ஜிகளை ஒரு வடிதட்டில் போட்டு எண்ணெயை வடியவிட்டு சூடாகப் பரிமாறவும்.
  7. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, தொக்கு அல்லது சாஸுடன் பரிமாறலாம்.