
மைசூர் வடை
சைவம்நான்கு வகை பருப்புகளை முந்திரி, பூசணி விதைகளுடன் கரகரப்பாக அரைத்து வடை போல பொரிக்கப்படும் மைசூர் வடை.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 1/2 கப் கடலைப் பருப்பு
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1/2 கப் பாசிப் பருப்பு
- 1/2 கப் உளுத்தம் பருப்பு
- 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி, பூசணி விதை, வெள்ளரி விதை
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலைத் தழை
- 1 டீஸ்பூன் இஞ்சி விழுது
- 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
- தேவைக்கேற்ப உப்பு
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து முழுகும்வரை தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறியதும் நீரை நன்றாக வடித்துவிட்டு கரகரப்பாக அரைக்கவும். உப்பு சேர்த்து கடைசியில் ஆட்டவும்.
- குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பொருட்களைச் சேர்த்து கலக்கவும்.
- எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து, வடை போல தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- சூடாக ஏதாவது தொக்கு அல்லது சாஸுடன் பரிமாறவும்.