மைசூர் பாகுவின் புகைப்படம், வெண்கலத் தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

மைசூர் பாகு

சைவம்

சர்க்கரை-நெய் பாகில் கடலை மாவு வேகவைத்து உயர்ந்து உறையும் வரை தயாரிக்கப்படும், வாயில் கரையும் பாரம்பரிய மைசூர் பாகு.

தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
8
கடினத்தன்மை
கடினம்
வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • 250 கிராம் கடலை மாவு
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • ¾ கிலோ சீனி
  • ¾ கிலோ டால்டா அல்லது நெய்

செய்முறை

  1. கனத்த பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பிபதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு கையால் துருவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து விட்டால் மைசூர் பாகு ரெடியாகி விடும். ஆறுவதற்கு முன் வில்லைகள் போடவும்.