
மட்டன் ஸ்பிரிங் ரோல்
அசைவம்சோயா சாஸில் வதக்கிய மட்டன் கீமா நிரப்பி மாவு ரோலாக மடித்து பொரிக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1 டீஸ்பூன் கொத்திய கறி
- தேவையான அளவு பெ. வெங்காயம்
- பொரிக்க இஞ்சி, பூண்டு விழுது
- ½ டீஸ்பூன் சோளமாவு
- 1 ஸ்பூன் பச்சரிசி மாவு
- 1 முட்டை
- 1 டீஸ்பூன் மிளகுதூள்
- தேவையான அளவு உப்பு
- பொரிக்க எண்ணெய்
- ½ டீஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
செய்முறை
- கறியை லேசாக உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் கறி, சோயா, தக்காளி சாஸ் சேர்த்து சுண்ட வதக்கிக் கொள்ளவும். அடுத்து இரண்டு மாவுடன் முட்டை, மிளகுதூள், அஜினோமோட்டோ சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் சிறுசிறு தோசைகளாக ஊற்றிக் கொள்ளவும் 10 அல்லது 15 தோசைகள் செய்யவும். ஒவ்வொரு தோசைகளின் மேலும் வதக்கி வைத்துள்ள கறிக்கலவையை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து ரோல் செய்து இரண்டு ஓரங்களையும் லேசாக மாவு வைத்து மூடவும். இந்த ரோல்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.