மட்டன் டாலின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

மட்டன் டால்

அசைவம்

மட்டனும் கடலைப்பருப்பும் குக்கரில் வேகவைத்து, வறுத்த முழு மசாலா தேங்காய் கலவையில் வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கறி

பொருட்கள்

  • ¼ கிலோ கொத்துக்கறி
  • 200 கிராம் கடலைப்பருப்பு
  • 1 தேக்கரண்டி கறிமசால் பொடி
  • 4 கிராம்பு
  • 1 அங்குலம் இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 4 கரண்டி நல்லெண்ணெய்
  • சிறிது புளி
  • 10 வற்றல்
  • 1 தேக்கரண்டி மல்லி
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • ½ தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1 தேக்கரண்டி கசகசா
  • 4 தேங்காய்ச்சில்

செய்முறை

  1. குக்கரில் பருப்பையும், கறியையும் வேக வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தட்டின இஞ்சி, கிராம்பு, பூண்டு வறுத்து அரைத்த மசாலாக்களையும் போட்டுத் தாளித்து நன்றாக வதக்கவும். மசாலை வாசனை வந்ததும் அரைத்த தேங்காயை ஊற்றி வேக வைத்த கறியையும், பருப்பையும் கலந்த தேவையான உப்பு, மல்லிச்செடி போட்டு புளியைக் கரைத்து ஊற்றி குழம்பு வற்றியதும் இறக்கவும்.