மட்டன் பிரியாணியின் புகைப்படம், வாழை இலையில் பரிமாறப்பட்டுள்ளது

மட்டன் பிரியாணி

அசைவம்

குக்கரில் வேகவைத்த மட்டனை தேங்காய்ப்பாலில் மசாலா அரிசியுடன் மெதுவாக வேகவைக்கப்படும் பிரியாணி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
40 நிமிடங்கள்
மொத்த நேரம்
70 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்சாதம் வகை

பொருட்கள்

  • 250 கிராம் பிரியாணி அரிசி
  • 100 கிராம் நெய்
  • தேவையான அளவு பெரிய வெங்காயம்
  • சிறிதளவு பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் வறுத்த மல்லி
  • 250 கிராம் மட்டன்
  • ½ முடி தேங்காய்
  • சிறிதளவு கொத்தமல்லி தழை
  • 1 டீஸ்பூன் பெரிய சீரகம்
  • கிராம்பு, ஏலம், பட்டை (நெய்யில் வறுத்து வைக்கவும்)

செய்முறை

  1. அரிசியை சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். குக்கரில் வெட்டிய கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள், 700 கிராம் நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், புதினா, இலை சேர்த்து வதக்கவும். அவித்த கறி, அரைத்த மசால், அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். குக்கரில் கறி வைத்து தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக கொதிக்க வைக்கவும். தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி சிறிது உப்பும் சேர்த்து கிளறி இளந்தீயில் குக்கரை மூடி 10 நிமிடத்தில் இறக்கவும். பிரியாணி தம் கட்டி சூடாக வைத்து பரிமாறவும்.