மட்டன் கோலா குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

மட்டன் கோலா குழம்பு

அசைவம்

பொன்னிறமாக பொரித்த மட்டன் கோலா உருண்டைகளை சோம்பு, வறுத்த கடலை மணம் மிக்க குழம்பில் வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • ½ கிலோ மட்டன் (கொத்தியது)
  • 25 கிராம் சின்ன வெங்காயம்
  • 25 கிராம் பூண்டு
  • ¼ முடி தேங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
  • ½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • தேவையானது உப்பு
  • பொரிக்க எண்ணெய்
  • ¼ முடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் கசகசா
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்

செய்முறை

  1. மேற்கண்ட பொருட்களை அதிகம் தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து ஒரு முட்டை உடைத்து ஊற்றி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். மசாலா குழம்புக்கான பொருட்களை நைசாக அரைத்து வைக்கவும். இப்பொழுது வாணலியில் 25 கிராம் எண்ணெய் ஊற்றி, தலா 1 டீஸ்பூன் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு வதக்கி 100 கிராம் பெ. வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கவும். பொன்நிறத்தில் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கவும். பின் 50 கிராம் தக்காளியைச் சேர்த்து கிளறவும். சுண்டைக்காய் சைஸ் புளியை கரைத்து ஊற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து குழம்பு நன்றாக கொதித்து வந்ததும், எண்ணெயில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். குழம்பு 10 நிமிடம் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.