முருங்கைக்காய் அவியல்

வகைகள்பொரியல்

பொருட்கள்

  • 25 எண்ணம் முருங்கைக்காய்
  • சிறிதளவு தண்ணீர்
  • உப்பு
  • 1 கரண்டி எண்ணெய்
  • கடுகு
  • 3 வெங்காயம் (வெட்டியது)
  • 2 வற்றல் மிளகாய் (கிள்ளி போட்டது)
  • கருவேப்பிலை

செய்முறை

  1. 25 முருங்கைக் காய்களை பெரிய துண்டுகளாக வெட்டி சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் காயிலுள்ள சதை பற்றை மட்டும் கரண்டியால் எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் 3 வெட்டிப் போட்டு 2 வற்றல் கிள்ளிப்போட்டு வதக்கி கருவேப்பிலை போட்டு முருங்கைக்காய் கூழையும் போட்டு இரண்டு கிண்டி இறக்கவும்.