மூங் ஃபிங்கர்ஸ்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

மூங் ஃபிங்கர்ஸ்

சைவம்

வேகவைத்த பாசிப்பருப்பு, நனைத்துப் பிழிந்த பிரட்டுடன் மசாலா கலந்து விரல் வடிவில் உருட்டி மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/2 கப் பாசிப் பருப்பு
  • 8 ஸ்லைஸ் பிரட் (ரொட்டி)
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  • தேவையான அளவு உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது
  • எண்ணெய் (தேவையான அளவு, பொரிக்க)

செய்முறை

  1. பருப்பைக் கழுவி பதமாகத் தண்ணீரில் வேக வைக்கவும் (பருப்பு குழைய வேகக் கூடாது). தண்ணீரை வடித்து விட்டு பருப்பைப் பிழிந்து ஒரு பேசினில் வைக்கவும்.
  2. பிரட்டை ஒவ்வொரு துண்டாகதண்ணீரில் போட்டு உடனே பிழிந்து எடுத்து பருப்புடன் சேர்க்கவும். மற்ற குறிப்பிடப்பட்ட பொருட்களைச் சேர்த்து கலக்கவும்.
  3. சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். பிறகு அதை நீளவாக்கில் குழல்கள் போலாக்கவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  4. குறிப்பு: பருப்பையும், பிரட்டையும் நன்றாகப் பிழிய வேண்டும். இல்லாவிடில் பொரிக்கும்போது பிரிந்து விடும். அப்படி பிரிந்தால் சிறிதளவு அரிசிமாவு சேர்க்கலாம்.