காய்கறி கபாப்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

காய்கறி கபாப்

சைவம்

ஆவியில் வேகவைத்த கேரட், பீட்ரூட், வாழைக்காய், உருளைக்கிழங்கு கலவையை சூடான மசாலா விழுதுடன் கலந்து குழல் வடிவில் பொரிக்கப்படும் கபாப்.

தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
70 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்கபாப் வகைகள்

பொருட்கள்

  • 2 வெங்காயம்
  • 3 கேரட்
  • 100 கிராம் பீன்ஸ்
  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 வாழைக்காய்
  • 1 பீட்ரூட் (சிறியது)
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • எண்ணெய் (சுடுவதற்கு)
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கீரீம் (கடைந்த பாலேடு)
  • தேவைக்கேற்ப உப்பு
  • 4 பல்லு பூண்டு (அரைக்க)
  • 1/2 அங்குலத் துண்டு இஞ்சி (அரைக்க)
  • 1 டீஸ்பூன் கசகசா (அரைக்க)
  • 4 பச்சை மிளகாய் (அரைக்க)
  • 1/2 டீஸ்பூன் சீரகம் (அரைக்க)
  • 1/4 டீஸ்பூன் சோம்பு (அரைக்க)
  • 2 ஏலக்காய் (அரைக்க)
  • 1/2 டீஸ்பூன் மிளகு (அரைக்க)
  • 2 டீஸ்பூன் வினிகர் (அரைக்க)
  • பட்டை (சிறிய துண்டு, அரைக்க)
  • 2 லவங்கம் (அரைக்க)

செய்முறை

  1. கேரட், பீட்ரூட், அரிந்த பீன்ஸ் போன்ற காய்கறிகளை குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். உருளைக்கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் அடியில் வேறு கிண்ணத்தில் வேகவைக்கவும். வாழைக்காயைத் தோலோடு மேல்தட்டில் ஆவியில் வேகவைக்கவும்.
  2. வெங்காயத்தைத் தோல் சீவி துருவவும். உருளைக் கிழங்கையும், வாழைக்காயையும் வெந்ததும் தோலெடுத்து நன்கு மசிக்கவும். வெந்த முழு கேரட், பீட்ரூட்டை துருவவும்.
  3. சிறிது எண்ணெயைச் சூடாக்கி துருவிய வெங்காயத்தை சிவக்க வதக்கி அரைத்த விழுதைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும்வரை நன்கு கிளறவும்.
  4. இதில் வேந்த காய்கறிகளைச் சேர்த்து ஈரம் நன்கு வற்றும்வரை வதக்கி, உப்பு, சர்க்கரை சேர்க்கவும். அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஆறியதும் கடலை மாவு, காய்ந்த பிரட் தூள் சேர்க்கவும்.
  5. ரொட்டித் துண்டங்களை தண்ணீரில் முக்கி எடுத்து நன்றாகப் பிழிந்துவிட்டு இக் கலவையில் சேர்த்துப் பிசையவும். சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளை இந்த மசாலாவிலிருந்து தயாரிக்கவும்.
  6. இந்த உருண்டைகளை மெலிதாக, நீளமாக ஒரே அளவான குலோப் ஜாமூன் போல தயாரிக்கவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும். புதினா சட்னி, இனிப்பு சட்னி மற்றும் தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  7. வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டங்களாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். இதையும் பொரித்த கபாபோடு பரிமாறவும்.
  8. குறிப்பு: ஓவன் இருப்பவர்கள் அதிலுள்ள Skewers-ன் மேல் இதை உருட்டி Grill-ல் வைத்து பொன்னிறமானதும் மேலே வெண்ணெய் தடவி பரிமாறலாம், அல்லது நிட்டிங் ஊசியின் மேல் சொருகி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம். கசகசாவை மிக்ஸியில் அரைப்பதற்கு, கொதிக்கும் சூடு உள்ள தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்துவிட்டு முதலில் இதை அரைத்து பிறகு அதோடு மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கவும்.