
புதினா கபாப்
சைவம்மசித்த உருளைக்கிழங்கு-கேரட்டை வதக்கிய முளைபயறு, அரைத்த புதினா-மிளகாய் விழுதுடன் கலந்து குழல் வடிவில் பொரிக்கப்படும் கபாப்.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கபாப் வகைகள்
பொருட்கள்
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு
- 1/2 கப் முளைவிட்ட பாசிப்பயறு
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 3 கேரட்
- 8 ரொட்டித் துண்டுகள்
- 3 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித் தூள் (அ) ரஸ்க் தூள்
- தேவைக்கேற்ப உப்பு
- 5 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- 6 பச்சை மிளகாய் (அரைக்க)
- 4 காய்ந்த மிளகாய் (அரைக்க)
- 3 பல்லு பூண்டு (அரைக்க)
- 1 அங்குலத் துண்டு இஞ்சி (அரைக்க)
- 1/4 கப் புதினா இலை (அரைக்க)
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை (அரைக்க)
செய்முறை
- கேரட், உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி முழுதாகவே குக்கரில் வேக வைக்கவும். நன்கு வெந்ததும், உருளைக்கிழங்கின் தோலை எடுத்துவிட்டு, கேரட்டோடு சேர்த்து சூடாக இருக்கும் போதே நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- முளைபயறை, குக்கரில் ஆவியில் 3 நிமிடம் வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பொடியாக அரிந்த வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி வெந்த பயறைச் சேர்த்து கலந்து ஈரம் வற்றியதும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- மசாலா வாசனை நன்கு வரும்போது கடலை மாவைச் சேர்த்து 2 நிமிடம் குறைந்த அனலில் வதக்கவும். கடைசியில் மசித்த உருளைக்கிழங்கு கேரட் கலவையைச் சேர்த்து உப்பு, கரம்மசாலா பொடி சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆற வைக்கவும். பிரட் துண்டங்களை ஒவ்வொன்றாகத் தண்ணீரில் முக்கி எடுத்து அதைக் கெட்டியாகப் பிழிந்து வேந்த கலவையில் சேர்க்கவும்.
- இதை எலுமிச்சையளவு உருண்டைகளாக்கி காய்ந்த ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து நீளவாக்கில் ஜாமூனைப் போல உருட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.