புதினா பக்கோடா-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

புதினா பக்கோடா

சைவம்

கரகரப்பாக அரைத்த கடலைப்பருப்பை புதினா, கொத்தமல்லி, இஞ்சி-மிளகாய் விழுதுடன் கலந்து மணமுள்ள பக்கோடாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 1 கப் கடலைப் பருப்பு
  • 1 கப் பொடியாக நறுக்கிய புதினாத் தழை
  • 1/3 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1 அங்குலத் துண்டு இஞ்சி (அரைக்க)
  • 10 பச்சை மிளகாய் (அரைக்க)

செய்முறை

  1. கடலைப் பருப்பைக் கழுவி முழுகும் வரை தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு வடைக்கு அரைப்பது போல கரகரப்பாக அரைக்கவும்.
  3. கடைசியில் உப்பு சேர்த்துக் கலந்து அரிந்த புதினா, கொத்தமல்லி, மற்றும் அரைத்த விழுது சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
  4. 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் இதில் விட்டுக் கலக்கவும்.
  5. சிறிய உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
  6. கவனிக்க: புதினாவைக் கழுவி அரிந்த உடனே மாவில் கலந்து விடவும். அரிந்தபின் அப்படியே வைத்திருந்தால் கசப்பேறி விடும். சிறிது பொடி உப்பு சேர்த்துப் பிசறினால் சிறிது நேரம்வரை வைத்திருக்கலாம்.