புதினா வெங்காயச் சட்னி-இன் புகைப்படம், பச்சை வெங்காயத்துடன் பக்கத்தில்

புதினா வெங்காயச் சட்னி

சைவம்

வதக்கிய மிளகாய், சிறு வெங்காயம், புதினாவை தேங்காய், புளியுடன் அரைத்து கடுகு-பருப்பு தாளித்து தயாரிக்கப்படும் சட்னி.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
10 நிமிடங்கள்
மொத்த நேரம்
25 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்சட்னி

பொருட்கள்

  • 7 பச்சை மிளகாய்
  • 10 தோலுரித்த சிறிய வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா (கொத்தமல்லி விதை)
  • 1 1/2 கப் உருவிய புதினா இலை
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  • தேவைக்கேற்ப உப்பு
  • சிறு நெல்லிக்காயளவு புளி
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு (தாளிப்பதற்கு)
  • 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு (தாளிப்பதற்கு)
  • சிறிதளவு பெருங்காயப் பொடி (தாளிப்பதற்கு)

செய்முறை

  1. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சிகப்பு மிளகாய், தனியா, சேர்த்துக் கலந்து கடைசியில் வெங்காயம், புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  2. துருவிய தேங்காயைச் சேர்த்து கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
  3. ஆறியபின் உப்பு, ஊறவைத்த புளி சேர்த்து கெட்டியான சட்னியாக அரைக்கவும்.
  4. சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு, கடலைப் பருப்பு தாளித்து பெருங்காயப் பொடி கலந்த சட்னியோடு கலக்கவும்.