
புதினா, கொத்தமல்லி சட்னி (கட்லெட்டிற்கு)
சைவம்வதக்கிய புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை தேங்காய், வெங்காயத்துடன் அரைத்து கட்லெட்டுடன் பரிமாறப்படும் சட்னி.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 5 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 20 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சட்னி
பொருட்கள்
- 2 கப் உருவிய புதினா இலை
- 1 கப் அரிந்த கொத்தமல்லித் தழை
- 6 கீறிய பச்சை மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
- 1 வெங்காயம் (சுமாரான சைசில்)
- தேவைக்கேற்ப உப்பு
- சிறிதளவு எண்ணெய்
செய்முறை
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை 2 நிமிடங்கள் வதக்கவும்.
- ஆறியபின் உப்பு, வெங்காயம், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். கட்லெட்டோடு பரிமாறவும்.