
புதினா சட்னி (சாண்ட்விச்சிற்கு)
சைவம்பச்சை புதினாவை இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காயுடன் நைசாக அரைத்து சாண்ட்விச்சிற்கு பூச தயாரிக்கப்படும் சட்னி.
- தயாரிப்பு நேரம்
- 10 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 10 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சட்னி
பொருட்கள்
- 1 கப் உதிர்த்த புதினா இலை
- 1/2 அங்குலத் துண்டு தோல் சீவிய இஞ்சி
- 2 பல்லு பூண்டு (உரித்தது)
- 4 பச்சை மிளகாய்
- 1 வெங்காயம் (பெரியதாக அரியவும்)
- 1 டேபிள் ஸ்பூன் துருவிய புளிப்பு மாங்காய் (அ) எலுமிச்சை சாறு
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
- குறிப்பிட்டுள்ள பொருட்களை நைசாக சிறிதளவே தண்ணீர் தெளித்து கெட்டியான சட்னியாக அரைக்கவும்.
- ரொட்டித் துண்டுகளின் மேல்பூசி சாண்ட்விட்ச் செய்ய உபயோகப்படுத்தவும்.