
புதினா சட்னி (கட்லெட்டிற்கு)
சைவம்பச்சை புதினாவை வெங்காயம், இஞ்சி, புளியுடன் அரைத்து கடுகு தாளித்து ரொட்டி அல்லது கட்லெட்டுடன் பரிமாறப்படும் சட்னி.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 5 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 20 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சட்னி
பொருட்கள்
- 1 1/2 கப் உருவிய புதினா இலை
- 1 பெரிய வெங்காயம் (சதுரமாக அரியவும்)
- 6 பச்சை மிளகாய்
- 1 அங்குலத் துண்டு இஞ்சி
- சிறிதளவு புளி (தண்ணீரில் ஊற வைக்கவும்)
- 2 டீஸ்பூன் காய்ந்த புளிப்பு மாதுளம்பழ விதை
- தேவைக்கேற்ப உப்பு
- எண்ணெய், கடுகு (தாளிக்க)
செய்முறை
- கூறப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக, கெட்டியான சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி கலக்கவும்.
- ரொட்டியின் மேல் பூசுவதற்கு உபயோகப்படுத்தவும்.
- குறிப்பு: இதே சட்னியில் புதினாவோடு சம அளவு கொத்தமல்லித் தழையும் சேர்த்து அரைக்கலாம்.