சிறிய சமோசா-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

சிறிய சமோசா

சைவம்

கலவையான காய்கறி மசாலாவை மெல்லிய அடுக்கு மைதா மாவில் முக்கோணமாக மடித்து மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
70 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 2 கப் மைதா
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் பொடி உப்பு
  • 2 சிட்டிகை பேக்கிங் பவுடர்
  • ஐஸ் தண்ணீர் (மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு)
  • 2 வெங்காயம்
  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 2 கேரட்
  • 100 கிராம் பட்டாணி
  • 1 பீட்ரூட்
  • 7 பீன்ஸ்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1/2 டீஸ்பூன் காய்ந்த மாங்காய் பொடி
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • எண்ணெய் (தேவையான அளவு)

செய்முறை

  1. மாவு பிசைய: மைதா மாவோடு உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும். இதை ஒரு பேசினில் கொட்டி எண்ணெய் சேர்த்து கைகளால் நன்கு பிசறி விடவும். ஐஸ் தண்ணீர் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவு போல பிசையவும். பல நிமிடங்கள் நன்கு அடித்து மாவிற்கு எலாஸ்டிக் தன்மை வருமளவிற்கு பிசையவும். ஒரு ஈரத்துணி கொண்டு மூடி 1/2 மணி நேரம் வைக்கவும்.
  2. மசாலா செய்முறை: வெங்காயம் மற்றும் காய்கறிகளையும் தோல்சீவி சிறு துண்டுகளாக்கவும். உருளைக் கிழங்கை முழுதாகக் குக்கரில் வேகவைத்து, தோல்நீக்கி மசிக்கவும். மற்ற அரிந்த காய்கறிகளையும், பட்டாணியையும் ஆவியில் வேக வைக்கவும். பச்சை மிளகாயை விழுதாக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம், மிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் சிவந்ததும் சீரகத்தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும். வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வாசனை வரும்படி வதக்கவும். கடைசியில் மாங்காய்த் தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
  3. சமோசா செய்முறை: பிசைந்த மைதா மாவை 8 உருண்டைகளாக்கவும். ஒவ்வொன்றையும் மெல்லிய சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் மேல் 1 டீஸ்பூன் எண்ணெய் தடவி சிறிது மைதா மாவு தூவவும். அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைக்கவும், அதன் மேலும் இதேபோல் பூசி, 3, 4ம் சப்பாத்திக்கும் இதே போல் செய்து நான்கு சப்பாத்திகளையும் ஒன்றாக ஒரு அடுக்காக வைக்கவும். முதல் அடுக்கை சூடான சப்பாத்திக் கல்லின் மேல் போடவும். 1/2 நிமிடம் வெந்ததும் அடுக்கு முழுவதையும் தலைகீழாகக் கல்லில் திருப்பி விட்டு மேலாக வரும் சப்பாத்தியை எடுத்து விடவும். மறுபடியும் திருப்பிப் போட்டு மேலே வரும் சப்பாத்தியை எடுத்து விடவும். இதே போல் மொத்த அடுக்குகளையும் செய்து ஒவ்வொரு சப்பாத்தியும் ஒரு பக்கம் மட்டும் கருப்பாகாமல் லேசாக சுட்டவுடனே பிரித்து எடுக்கவும். எல்லா சப்பாத்தியையும் சுட்டபின் ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
  4. ஒவ்வொரு சப்பாத்தியையும் நீள வாக்கில் 3 அல்லது 4 ரிப்பன் போல (3 அங்குல அகலத்தில்) அறுக்கவும். 2 டேபிள் ஸ்பூன் மைதாவோடு சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல குழைக்கவும். ஒரு மைதா ரிப்பனை எடுத்து ஒரு மூலையில் முக்கோணமாக மடிக்கவும். இரு முனைகளும் சந்திக்கும் மூலையில் சிறிது மைதா பசையைத் தடவவும். அந்த முக்கோண மூலைப் பாக்கெட்டின் உள்ளே சிறிது மசாலா வைக்கவும். குறுக்கில் முக்கோணமாகவே மடித்து கடைசியில் மூடியும் இடத்தில் சிறிது மைதாப் பசை கொண்டு தடவி ஒட்டவும். எல்லா சமோசாக்களையும் இதே போல செய்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். இளஞ் சூடான எண்ணெயில் நன்கு சிவக்கப் பொரித்து சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  5. குறிப்பு: இந்த அதே மைதா மாவு மற்றும் மடிப்பு முறையைப் பயன்படுத்தி வெவ்வேறு மசாலாக்களால் சமோசா நிரப்பலாம் என்று மூலப்பிரதி விவரிக்கிறது -- பனீர் சமோசா, முளைபயறு சமோசா, இனிப்பு சமோசா, உலர்ந்த பழவகை சமோசா ஆகிய இன்னும் 4 நிரப்புதல் மாறுபாடுகளையும் தருகிறது. இந்த பதிப்பில் மேலே கொடுக்கப்பட்ட காய்கறி நிரப்புதலை மட்டும் பிரதானமாகக் கொள்ளப்பட்டுள்ளது.