பால் பாஸந்தி-இன் புகைப்படம், பிஸ்தா, குங்குமப்பூவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது

பால் பாஸந்தி

சைவம்

பாலை படிப்படியாக சுண்டக் காய்ச்சி, படிந்த பாலாடையை மீண்டும் கலந்து, சீனி, முந்திரி, குங்குமப்பூ, ஏலக்காயுடன் தயாரிக்கப்படும் கெட்டியான பால் இனிப்பு.

தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
60 நிமிடங்கள்
மொத்த நேரம்
70 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • 2 லிட்டர் ஆவின் பால்
  • 20 கிராம் முந்திரிப்பருப்பு
  • சிறிதளவு குங்குமப்பூ
  • 300 கிராம் சீனி
  • 20 கிராம் சாரப் பருப்பு
  • சிறிதளவு பச்சை கற்பூரம்

செய்முறை

  1. கனத்த பாத்திரத்தில் பாலை வைத்து சிறு தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஆடை படியவும் ஒதுக்கி விடவும். இவ்வாறு ஆடை படிய படிய ஒதுக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
  2. பால் வற்றியபின் சீனியை போட்டு சுற்றி, பாத்திரத்தில் ஒட்டிய பாலாடைகள் கரண்டியால் எடுத்து விட்டு நன்றாகக் கடைந்து ஒரு கொதி கொதித்ததும் வாசனை சாமான்கள் கலந்து இறக்கி வைக்கவும்.
  3. ஆறியவுடன் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.