மிளகு வடை-இன் புகைப்படம், நசுக்கிய மிளகு துகள்களுடன்

மிளகு வடை

சைவம்

நசுக்கிய மிளகு, சீரகம் கலந்த கரகரப்பான உளுந்து மாவை கையால் வடிவமைத்து பொரிக்கப்படும், கோவில் மாலைக்கு உபயோகிக்கப்படும் மிளகு வடை.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • 1 கப் வெள்ளை உளுந்து
  • 1 டேபிள் ஸ்பூன் கருமிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. உளுந்தைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை வடித்துவிட்டு கரகரப்பாக, கெட்டியாக சிறிதளவே தண்ணீர் தெளித்து அரைக்கவும் (முடிந்தவரை கிரைண்டர் அல்லது ஆட்டுக் கல்லிலேயே அரைக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்தால் கடைசியில் பொடி உப்பு சேர்த்து கலக்கவும்). கரகரப்பாக பொடி செய்த மிளகு, சீரகப் பொடி மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு மாவை கைகளால் நன்கு கலக்கவும்.
  3. சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத்துணியின் மேல் மெல்லிய வடையாகத் தட்டவும்.
  4. மத்தியில் ஓட்டை போடவும். ஒவ்வொன்றாக எடுத்து வாணலியில் உள்ள எண்ணெய் கொள்ளும் அளவிற்கு போட்டு பொரிக்கவும்.
  5. பாதி வெந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து விடவும்.
  6. மிச்சமிருக்கும் மாவையும் சீக்கிரமாகப் பொரித்தெடுக்கவும்.
  7. கடைசியில் எல்லா வடைகளையும் இன்னொரு தடவை பொன்னிறமாகும் வரை பொரித்து பரிமாறவும்.
  8. மாற்று செய்முறை: (1) சிறிதளவு ரவையையும் மாவோடு சேர்த்து அரைத்தால் வடை நன்றாக மொறுமொறுப்பாக வரும். (2) முழு கருப்பு உளுந்தையும் உபயோகப்படுத்தி இதே மாதிரி வடை செய்யலாம் -- சீரகம் சேர்க்காமல் மிளகை மட்டும் சேர்த்து மாவோடு அரைக்கவும். (3) 1 டேபிள் ஸ்பூன் பச்சரிசியையும் உளுந்தோடு சேர்த்து ஊற வைத்து அரைத்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
  9. குறிப்பு: ஆஞ்சநேயருக்கு வடை மாலை தயாரிக்க இந்த முறையில் தயாரித்த வகைகளே உபயோகப்படுத்தப்படுகிறது.