கறி உப்புமாவின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

கறி உப்புமா

அசைவம்

வறுத்த ரவையை வேகவைத்த இறைச்சி சாற்றில் சேர்த்து வதக்கும் மசாலா உப்புமா.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/18 வீசை வீசை கொத்துக்கறி
  • 6 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/8 படி ரவை
  • 2 பட்டை
  • 1 கரண்டி நெய்
  • மஞ்சள் தூள், இஞ்சி
  • கொத்தமல்லி இலை
  • 3 தேக்கரண்டி டால்டா
  • 4 கிராம்பு

செய்முறை

  1. 1/8 வீசை கொத்துக்கறியில் தேவையான உப்பு, மஞ்சள்தூள் போட்டு 1/16 படி தண்ணீர் ஊற்றி வைக்கவும். பெரியவெங்காயம் 2, பச்சை மிளகாய் 6, சிறிய துண்டு இஞ்சி, சிறிது கொத்தமல்லி இலை ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 1/8 படி ரவையைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும். 3 தேக்கரண்டி டால்டாவைக் காய வைத்து 2 பட்டை, 4 கிராம்பு போட்டு சிவக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிய பின் கறிவேப்பிலை போட்டு 1/4 படி தண்ணீர் ஊற்றவும். திட்டமாய் உப்பு போட்டு வெந்தக்கறியையும் அதனுடன் சேர்க்கவும். தண்ணீர் கொதித்த பின் ரவையைப் போட்டு லேசான நெருப்பில் கட்டிவிடாமல் கிளறி விட்டு கொத்தமல்லி இலை, 1 கரண்டி நெய் விட்டு கிளறி இறக்கவும்.