கறி சால்னாவின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

கறி சால்னா

அசைவம்

தக்காளி, அரைத்த சிறிய வெங்காய-மிளகாய் மசாலாவுடன் தேங்காய்ப் பாலில் எண்ணெய் பிரியும் வரை இறைச்சி வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கறி

பொருட்கள்

  • ¼ கிலோ கறி
  • 200 கிராம் தக்காளிப்பழம்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 4 கரண்டி நல்லெண்ணெய்
  • 1 முடி தேங்காய்
  • 8 வற்றல்
  • 2 தேக்கரண்டி சீரகம்

செய்முறை

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காயந்ததும், சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தக்காளிப்பழத்தையும் (வெங்காயம், வற்றல், சீரகம் சேர்த்து அரைக்கவும்) அரைத்த மசாலையும் போட்டு நன்றாக சிவக்க வதக்கி கறியைப் போட்டு தேங்காய்ப் பால் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு மூடி நன்றாக வெந்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். தேங்காய்ப்பாலுக்குப் பதில் தேங்காய்ச்சில்லை நன்றாக அரைத்துப் போடலாம்.