கொத்துக்கறி உருண்டைக்குழம்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

கொத்துக்கறி உருண்டைக்குழம்பு

அசைவம்

மசாலா கலந்த அரைத்த இறைச்சியை உருண்டைகளாக்கி பொரித்து, வறுத்த தேங்காய் முழு மசாலா குழம்பில் வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
30 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்குழம்பு

பொருட்கள்

  • ¼ கிலோ கொத்துக்கறி
  • 6 வற்றல்
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1 பெரியது வெங்காயம்
  • 1 முடி தேங்காய்
  • 1 தேக்கரண்டி கசகசா
  • 1 அங்குலம் பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 6 முந்திரிப்பருப்பு
  • ½ முடி எலுமிச்சம்பழம்

செய்முறை

  1. மேற்சொன்ன சாமான்களுள் தேங்காய் தவிர பிறவற்றை இளம் வறுப்பாக வறுத்துக் கொண்டு அரைக்க வேண்டும். குக்கர் சட்டியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கி உப்பு போட்டு உரலில் நன்றாக ஆட்ட வேண்டும். பின் அரைத்த மசாலாவில் பாதியைப் போட்டு, ஒரு முட்டையையும் ஊற்றி கறிக்கலவையை நன்றாக கலந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும். சட்டியைக் காயவைத்து 2 கரண்டி எண்ணெய், 2 கரண்டி நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, புதினா, மல்லி, பெரியவெங்காயம் போட்டு நன்றாக வதக்கி மீதி மசாலாவை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப் பாலில் கலந்து ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கொதிக்கும்போது மேற்படி உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும். குழம்பைக் கிண்டாமல் 2 கொதி கொதித்து எண்ணெய் தெளியவும் இறக்கவும். பாதி முடி எலுமிச்சம்பழச்சாறு பிழியவும். குறிப்பு: உருண்டைகளை வடை மாதிரி எண்ணெயில் வறுத்து எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கியும் இதனைத் தயார் செய்யலாம்.