
கறி பப்ஸ்
அசைவம்மசாலா கறி, உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட மைதா மாவு பப்ஸ் அடுப்பில் சுடப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 70 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 250 கிராம் கொத்துக்கறி
- 2 உருளைக்கிழங்கு
- 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 1 தேக்கரண்டி பட்டை, கிராம்புத்தூள்
- 1 அங்குலம் இஞ்சி
- 5 பல் பூண்டு
- ½ கிலோ மைதா
- 100 கிராம் கொழுப்பு
- 2 தேக்கரண்டி சோடா உப்பு
- 2 முட்டை
- 200 கிராம் டால்டா
- 2 பெரிய வெங்காயம்
- உப்பு, மல்லி தழை, புதினா
செய்முறை
- கறியைத் தனியாக உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உப்பு போட்டு உதிர்த்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் 2 கரண்டி, நெய் விட்டு, பொடியாக வெட்டி வைத்திருக்கும் மல்லி, புதினா, வெங்காயம், இஞ்சி பூண்டு போட்டு நன்றாக வதக்கி வெந்த கறி, மிளகாய் தூள், கரம் மசால் தூள், உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு போட்டு தண்ணீர் சத்தில்லாமல் வதக்கி வைக்க வேண்டும். மைதாவை முட்டை மஞ்சள் கரு, உப்பு, சோடா உப்பு, அம்மியில் அரைத்த கொழுப்பு இவற்றைப் போட்டு பிசைந்து மடித்து பிசைந்து 4 பூரிகளாக உருட்டி ஒன்றுக்கு மேல் ஒன்று போட்டு நீளமாக பாய் போல சுருட்டி 4 பாகமாக பிரித்து பழையபடி விரித்து 1 மேஜைக்கரண்டி பூரி பூரணம் ஓரத்தில் வெள்ளைக்கரு தடவி டால்டாவில் பொரிக்கவும்.