
கொத்துக்கறி இட்லி
அசைவம்மசாலா கொத்துக்கறி நிரப்பப்பட்ட மாவுடன் ஆவியில் வேகவைக்கப்பட்டு, தேங்காய்-கறிவேப்பிலை தாளிப்புடன் முடிக்கப்படும் இட்லி.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 35 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்இட்லி வகைகள்
பொருட்கள்
- இட்லி மாவு
- ½ கிலோ கொத்துக்கறி
- 5 பல்பூண்டு
- 6 பச்சைமிளகாய்
- கொத்தமல்லி தழை (நறுக்கியது)
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- ½ முடி தேங்காய்
- ½ அங்குலம் இஞ்சி
- 2 பெரிய வெங்காயம்
- 1 சிறு கட்டு சிறுகட்டு புதினா
செய்முறை
- முன்தினம் இட்லிக்கு மாவு ஆட்டி, தயாரித்துக்கொள்ளவும். ½ கிலோ கொத்துக்கறியை சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் 3 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ½ அங்குலம் இஞ்சி, 5 பல் பூண்டு, கொத்துக்கறி இவற்றைப் போட்டு வதக்கவும். வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கறியை நன்றாக வேகவிடவும். வெந்த பின் இறக்கிக்கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 6 பச்சை மிளகாய்கள், 1 சிறு கட்டு புதினா, கொத்தமல்லி தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கியவற்றைப் போட்டு வதக்கி, இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியையும் சேர்க்கவும். தேவையான உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும். 1 தேக்கரண்டி கரம் மசாலாவை போட்டு இறக்கிக்கொள்ளவும். ½ முடி தேங்காயை துருவிக்கொள்ளவும். இட்லி வேக வைக்கும் தட்டுகளில் இட்லி மாவு சிறிதளவு ஊற்றி இதன் மீது கொத்துக்கறி கலவை சிறிதளவு வைத்து மறுபடியும் இதன் மீது மாவை ஊற்றி இட்லிகளை வேக வைக்கவும். வெந்தபின் இறக்கி, இட்லிகளை எடுத்துக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, புதினா ஆகியவற்றைப் போட்டு இறக்கவும். வேக வைத்து இட்லிகள் மீது தாளித்த கலவையைத் தூவி பரிமாறவும்.