கறி சாப்ஸின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

கறி சாப்ஸ்

அசைவம்

அரைத்த தேங்காய், மசாலாவுடன் குக்கரில் வேகவைத்த இறைச்சியை நெய்யுடன் இரும்புச் சட்டியில் முடிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
60 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்கறி

பொருட்கள்

  • ¼ கிலோ சாப்ஸ் கறி (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்)
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • வற்றல்
  • 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி
  • 1 தேக்கரண்டி கசகசா
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 8 சின்ன வெங்காயம் (வெட்டியது)
  • 1 முடி தேங்காய்
  • சிறியது இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 15 முந்திரிப்பருப்பு
  • உப்பு, மஞ்சள்

செய்முறை

  1. பாதி தேங்காயில் பால் எடுக்கவும். மீதி தேங்காயை மேலே உள்ள மசாலா சாமான்களுடன் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலில் கலந்து கறியையும் போட்டு, உப்பு மஞ்சள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். பின் இரும்புச்சட்டியில் நெய் 2 கரண்டி நல்லெண்ணெய் 2 கரண்டி ஊற்றி, முந்திரிப்பருப்பு, பட்டை சிறிது, கிராம்பு 3, ஏலக்காய் 3 போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கி முதல் பாலையும் சேர்த்து ஊற்றி, குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.