கறி பிரியாணியின் புகைப்படம், வாழை இலையில் பரிமாறப்பட்டுள்ளது

கறி பிரியாணி

அசைவம்

தேங்காய்ப்பாலில் மசாலா அரிசியும் வேகவைத்த இறைச்சியும் மெதுவான தீயில் வேகவைக்கப்படும் பிரியாணி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
40 நிமிடங்கள்
மொத்த நேரம்
70 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்சாதம் வகை

பொருட்கள்

  • ¼ படி பிரியாணி அரிசி
  • 250 கிராம் கறி
  • ½ முடி தேங்காய் (பால் எடுக்கவும்)
  • 3 அங்குலம் இஞ்சி (அரைப்பதற்கு)
  • 1 பூண்டு
  • 1 அங்குலம் நெய்யில் வறுத்தபட்டை
  • 6 கிராம்பு
  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி (வறுத்தது)
  • புதினா, கொத்தமல்லி தழை
  • 2 பெல்லாரி
  • 6 மிளகாய்
  • 6 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்

செய்முறை

  1. அரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய காய்கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள், 1/8 படி நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரிந்த வெங்காயம், புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும். அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தேங்காய்ப் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை மூடி வைத்து 10 நிமிடத்தில் இறக்கவும்.