மசாலா டோஸ்ட்-இன் புகைப்படம், தோசைக்கல்லில் இலேசாக வாட்டப்பட்டுள்ளது

மசாலா டோஸ்ட்

சைவம்

இஞ்சி-பூண்டு-புளி சட்னி தடவிய ரொட்டித் துண்டுகளை தோசைக்கல்லில் சிவக்க சுடப்படும் மசாலா டோஸ்ட்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
10 நிமிடங்கள்
மொத்த நேரம்
25 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்சாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 10 துண்டுகள் ரொட்டி
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 அங்குலத் துண்டு இஞ்சி (சட்னிக்கு)
  • 4 பல்லு பூண்டு (சட்னிக்கு)
  • 1/2 டீஸ்பூன் சீரகம் (சட்னிக்கு)
  • 1 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி (சட்னிக்கு)
  • தேவையான அளவு உப்பு (சட்னிக்கு)
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை (சட்னிக்கு)
  • சிறிது புளி (சட்னிக்கு)

செய்முறை

  1. மேலே உள்ள சட்னிப் பொருட்களை சிறிதளவே தண்ணீர் தெளித்து சட்னியாக அரைக்கவும்.
  2. ரொட்டித் துண்டுகளின் இருபுறமும் வெண்ணெய் தடவி அதன்மேல் சிறிதளவு அரைத்த சட்னியை தடவவும் (இரு புறமும்).
  3. தோசைக்கல்லை காய வைத்து பிரட் துண்டங்களை சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் சிவப்பாக சுடவும்.