மசாலா தோசையின் புகைப்படம், சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

மசாலா தோசை

சைவம்

இலேசாக மசாலா தூவப்பட்ட உருளைக்கிழங்கு பொடியுடன் மடிக்கப்பட்ட மொறுமொறுப்பான தோசை, தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவு.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்தோசை வகைகள்

பொருட்கள்

  • 250 கிராம் உருளைக்கிழங்கு
  • 4 மிளகாய் (நறுக்கியது)
  • 3 வெங்காயம்
  • கருவேப்பிலை
  • மல்லிச்செடி
  • ஒரு சிறு துண்டு இஞ்சி (மிகவும் மெல்லியதாக வெட்டவும்)
  • 2 மேஜைக் கரண்டி பொரிகடலை (நைசாக பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, அரை குறையாக உதிர்த்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு இலேசாக வெங்காயத்தை வேக விடவும். மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் சற்று வற்றியதும் உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்துக் கிளறி, சற்று புரட்டினாற் போல் இறக்கி, பொரிகடலை மாவைத் தூவி கிளறி வைக்கவும். இட்லி தோசைக்குத் தயார் செய்த சட்னியைச் சற்று கெட்டியாக வைக்கவும். தோசைக் கல்லில் தோசை மாவை ஊற்றி நைசாக விரித்து திருப்பிப்போட்டு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்னியையும் விரித்து வைத்து மறுபாதி தோசையினால் மூடி பரிமாறவும்.