மசாலா உருளைக்கிழங்கு
மசாலா உருளைக்கிழங்கு
வகைகள்கறி
பொருட்கள்
- ¼ கிலோ உருளைக்கிழங்கு
- 4 வற்றல்
- 2 தேக்கரண்டி கொத்தமல்லி
- 10 முந்திரிப்பருப்பு
- சில தேங்காய் (பால் எடுத்துக் கொள்ளவும்)
- 2 கரண்டி எண்ணெய்
- கடுகு, உளுந்தம்பருப்பு
- 5 வெங்காயம் (நறுக்கியது)
- கருவேப்பிலை
- மஞ்சள் தூள்
- உப்பு
செய்முறை
- ¼ கிலோ உருளைக்கிழங்கை அதிகம் குறையாமல் வேக வைத்து உரித்து சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வற்றல் 4, கொத்தமல்லி 2 தேக்கரண்டி, முந்திரிப்பருப்பு 10 சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய் சில, பால் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் 5, கருவேப்பிலை போட்டு வதக்கி சிவந்ததும் தேங்காய்ப்பாலில் அரைத்த விழுதை கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் மசால் வாசனை போகும் வரை கொதிக்க வைத்து உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து கிளறி இறக்கவும். அதிகம் கெட்டியாகாமல் புரட்டினாற் போல் எண்ணெய் தெளிய இருக்க வேண்டும்.