
மசாலா பொரி - 2
சைவம்அரிசிப் பொரியை பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எலுமிச்சையில் ஊறவைத்த வெங்காயம், தேங்காய்-புதினா சட்னியுடன் கலந்து தயாரிக்கப்படும் உடனடி பொரி.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 20 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாட் வகைகள்
பொருட்கள்
- 4 கப் அரிசிப் பொரி
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை (தோலுரித்து பொடியாக அரிந்தது)
- 1/4 கப் சிறிய வெங்காயம் (பொடியாக அரிந்தது)
- 1 எலுமிச்சம்பழம்
- தேவைக்கேற்ப உப்பு
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 கப் துருவிய தேங்காய் (பச்சை சட்னிக்கு)
- 3 பச்சை மிளகாய் (பச்சை சட்னிக்கு)
- 1/2 கட்டு கொத்தமல்லித் தழை (பச்சை சட்னிக்கு)
- 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை (பச்சை சட்னிக்கு)
- தேவைக்கேற்ப உப்பு (பச்சை சட்னிக்கு)
செய்முறை
- அரிந்த சிறிய வெங்காயத்தோடு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- சட்னியை சிறிதளவே தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- பொட்டுக்கடலையையும், வேர்க்கடலையையும் பொரியோடு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கைகளால் நன்கு கலந்துவிடவும்.
- தேவைப்படும் அளவு சட்னியையும், ஊறவைத்த வெங்காயம், எலுமிச்சை ரசத்தோடு இதில் சேர்த்துக் கலந்து உப்பு, மிளகாய்த் தூள் பற்றாவிடில் தூவி கலந்து உடனே பரிமாறவும்.