
மசால் சுண்டல்
சைவம்பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, கொத்தமல்லி வறுத்து அரைத்த மசாலாவை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து, வேகவைத்த பருப்பு வகைகளுடன் தாளித்துப் பெறப்படும் சுண்டல்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 30 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சுண்டல்
பொருட்கள்
- வேகவைத்த பருப்பு வகை (கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவை)
- வற்றல்
- பெருஞ்சீரகம்
- கிராம்பு
- பட்டை
- கொத்தமல்லி
- தேங்காய் (அரைக்க; குறைவாக இருந்தால் கொஞ்சம் மட்டும் அரைத்துக் கொள்ளலாம்)
- எண்ணெய் (தாளிக்க)
- கடுகு, உளுந்தம் பருப்பு (தாளிக்க)
- இஞ்சி, பச்சை மிளகாய் (தாளிக்க)
- கருவேப்பிலை (தாளிக்க)
- பொரிகடலை (பொடி செய்தது, தூவ)
- மல்லிச்செடி (தூவ)
- தேங்காய்ப்பூ (தூவ)
செய்முறை
- வற்றல், பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, கொத்தமல்லி முதலிய வற்றை வறுத்து அரைக்கவும்.
- தேங்காய் குறைவாக இருந்தால் கொஞ்சம் மட்டும் அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.
- இந்த தாளிப்புடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து, வேகவைத்த பருப்பு வகையுடன் கலந்து வதக்கவும்.
- இறக்கும் சமயம் பொரிகடலையை நன்றாகப் பொடி செய்து அத்தோடு மல்லிச் செடியையும், தேங்காய்ப்பூவையும் சுண்டலில் தூவி இறக்கினால் உதிரியாகவும் நன்றாகவும் இருக்கும்.