மசாலா பொரி - 1-இன் புகைப்படம், நறுக்கிய பழம், காய்கறிகளுடன் கலந்துள்ளது

மசாலா பொரி - 1

சைவம்

அரிசிப் பொரியை பொட்டுக்கடலை, நறுக்கிய மாங்காய், தக்காளி, கேரட், பீட்ரூட்டுடன் கலந்து எலுமிச்சை ரசம் பிழிந்து தயாரிக்கப்படும் உடனடி பொரி.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
15 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்சாட் வகைகள்

பொருட்கள்

  • 5 கப் அரிசிப் பொரி
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலை
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 3/4 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய மாங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் கேரட் துருவல்
  • 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் துருவல்
  • 1 எலுமிச்சம் பழம்
  • ஓமப் பொடி (சேவ்) (விருப்பப்பட்டால்)

செய்முறை

  1. ஒரு அகலமான பேசினில் பொட்டுக்கடலை, பொரியை எடுத்துக்கொண்டு, கைகளால் சிறிதளவு எண்ணெய் விட்டு பிசறவும்.
  2. எண்ணெய் அதோடு ஒட்டிக் கொண்டதும், உப்பு, மிளகாய்த் தூள் தூவவும்.
  3. குறிப்பிடப் பட்டுள்ள காய்கறிகளைச் சேர்த்து சீக்கிரமாகக் கலந்து காரம் பற்றாவிடில் இன்னும் கொஞ்சம் சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து மேலே ஓமப்பொடி தூவி உடனே பரிமாறவும்.