மசாலா இட்லி-இன் புகைப்படம், வெட்டி, மசாலா காய்கறி நிரப்புதல் தெரியும்

மசாலா இட்லி

சைவம்

இட்லித் தட்டில் மாவு வார்க்கும் முன் மசாலா தூவிய கட்லட் மாவு போன்ற காய்கறிக் கலவையை வைத்து வேகவைக்கப்படும் இட்லி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்இட்லி வகைகள்

பொருட்கள்

  • இட்லி மாவு (மேற்சொன்னபடி தயார் செய்தது)
  • கலவையான காய்கறிகள் (பொடியாக நறுக்கியது, கட்லட்டிற்கு தயார் செய்வது போல்)
  • தேவைக்கேற்ப மசாலா

செய்முறை

  1. மேற்சொன்னபடி இட்லி மாவு தயாரித்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக கட்லட்டிற்குத் தயார் செய்வது போல் தயாரித்து வைக்கவும்.
  2. காய்கறிகளை கெட்டியாக மசால் சேர்த்து கட்லட்டிற்கு மாதிரியே செய்து வைக்கவும்.
  3. இட்லித் தட்டில் ஒரு கரண்டி இட்லி மாவு விடவும். மாவின் மீது காய்கறி ஒரு மேஜைக் கரண்டி அளவு வைக்கவும். மறுபடியும் அதன் மீது அரை கரண்டி இட்லி மாவு விடவும்.
  4. இவ்விதம் எல்லா இட்லிகளையும் நிரப்பி வேக வைத்து இறக்கவும்.