மசால் வடை-இன் புகைப்படம், தேங்காய் சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

மசால் வடை

சைவம்

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயுடன் கரகரப்பாக அரைத்த கடலைப்பருப்பை மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் மசால் வடை.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • 1 கப் கடலைப் பருப்பு
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 7 பச்சை மிளகாய் (விழுதாக்கவும்)
  • 1 டேபிள் ஸ்பூன் நசுக்கிய இஞ்சி
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலைத் தழை
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. பருப்பைக் கழுவி முழுகும் வரை தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு கரகரப்பாக அரைக்கவும்.
  3. இதோடு உப்பு, இஞ்சி விழுது, மிளகாய் விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
  4. எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து லேசாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  5. தொட்டுக்கொள்ள ஏதாவது தொக்கு வைத்து சூடாகப் பரிமாறவும்.
  6. மாற்று செய்முறை: (1) பட்டாணி பருப்பு கிடைத்தால் பாதி கடலைப் பருப்பு, பாதி பட்டாணி பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். (2) சிகப்பு மிளகாய், சீரகம், பெருங்காயம், ஒரு சில சிறிய வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்து மாவுடன் கலந்து வடை போடலாம். விருப்பப்பட்டவர்கள் சோம்பு மற்றும் முருங்கை இலை சேர்த்து வடை செய்யலாம். (3) மாவோடு பொடியாக நறுக்கிய புதினா சேர்த்தால் ருசியான புதினா வடை கிடைக்கும். (4) பொடியாக நறுக்கிய முளைக்கீரை அல்லது அரைக்கீரை சேர்த்து கீரை வடையாகப் போடலாம்.