
மங்களூர் போண்டா
சைவம்தயிரில் ஊற வைத்த மைதா-ரவை-அரிசிமாவை வெங்காயம்-மிளகாயுடன் கலந்து மென்மையான போண்டாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்பொண்டா வகைகள்
பொருட்கள்
- 1 கப் மைதா
- 1/4 கப் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் ரவை
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலைத் தழை
- 2 சிட்டிகை சமையல் சோடா
- தேவைக்கேற்ப உப்பு
- 1 கப் புளித்த கெட்டித் தயிர்
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- மாவு வகைகளையும் ரவையையும் தயிரில் கலந்து 5 அல்லது 6 மணி நேரம் உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
- வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா போன்றவற்றை பொரிப்பதற்கு சற்று முன் கலக்கவும்.
- வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, ஈரக் கைகளால் மாவைக் கிள்ளி உருண்டையாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- குறிப்பு: தயிர் அளவு மாவிற்குத் தகுந்து அதிகமாகவோ, குறைவாகவோ பிடிக்கலாம். தண்ணீர் சேர்க்க வேண்டாம். புளிப்புத் தயிரையே உபயோகப்படுத்தவும்.
- மாற்று செய்முறை: (1) ரவை, மைதா, அரிசி மாவு சம அளவு கலந்தும் போண்டா செய்யலாம். (2) ரவையை மட்டும் தயிரில் ஊறவைத்தும் போண்டா செய்யலாம். (3) இந்த மாவிலேயே பொடியாக நறுக்கிய கீரை அல்லது காய்கறிகளைக் கலந்து போண்டா போட்டால் சுவையாக இருக்கும்.