மல் பூரி
மல் பூரி
வகைகள்எண்ணெயில் பொரித்த ரொட்டி
பொருட்கள்
- 2 கப் மைதா மாவு
- ¼ கப் அரிசி மாவு
- 1 சிட்டிகை சோடா உப்பு
- ½ தேக்கரண்டி கேசரிப்பவுடர்
- 1 கப் தயிர்
- 2¼ கப் சீனி
- சுடுவதற்கு டால்டா அல்லது எண்ணெய்
செய்முறை
- இரண்டு மாவுகளையும் கலந்து தயிர் சேர்த்து பணியார மாவு போல் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். சீனியில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கேசரி பவுடர் சேர்த்து, பாகு கம்பிப் பதமாக தயாரித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி ஊற்றி வெந்ததும் எடுத்துச் சீனிப்பாகில் போட்டு பாகு குடித்ததும் எடுத்து வைக்கவும்.