மைதா பணியாரம்

வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 2 கப் மைதா மாவு
  • 1 வாழைப்பழம்
  • 1 கப் சீனி
  • சுடுவதற்கு டால்டா

செய்முறை

  1. எல்லாச் சாமான்களையும் சிறிது நீர் சேர்த்து இளக்கமாய் பிசைந்து ¼ மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். வாணலியில் எண்ணெயையை காய வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்ற வேண்டும். பணியாரம் எழும்பியவுடன் திருப்பிப் போட்டு வெந்தது பார்த்து எடுக்க வேண்டும். விரும்பினால் 1 மேஜைக்கரண்டி ரவை சேர்த்து வாழைப்பழம் போடாமலும் சுடலாம்.