மதுர் வடை-இன் புகைப்படம், மொறுமொறுப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது

மதுர் வடை

சைவம்

வெங்காயம் கலந்த மைதா-ரவை-அரிசிமாவு மாவை மெல்லிதாகத் தட்டி சிறு தொகுதிகளாக பொரிக்கப்படும் மதுர் வடை.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • 1/2 கப் மைதா
  • 1/2 கப் ரவை
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலைத் தழை
  • 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
  • தேவைக்கேற்ப உப்பு
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. மாவு வகைகளையும், ரவையையும் ஒன்றாக ஒரு அகலக் கிண்ணத்தில் கலந்து வைக்கவும்.
  2. மிளகாய் விழுது, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் போட்டு நன்றாக கலக்கவும்.
  4. மாவை 5 அல்லது 6 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும்.
  5. ஒரு பாகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகப் பிசையவும். எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து ஒரு பாலீதீன் பேப்பரின் மேல் அல்லது வாழையிலையின் மேலே மெல்லிய வடையாகத் தட்டவும்.
  6. ஒவ்வொன்றாக பத்திரமாக எடுத்து எண்ணெயில் சிவக்கப் பொரித்துப் பரிமாறவும்.
  7. ஒரு தடவை கலந்த மாவு தீர்ந்தபின் அடுத்த பாகத்தில் தண்ணீர் தெளித்து பிசையவும். எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்தால் சீக்கிரமாக வடை கலர் சிவந்துவிடும்.
  8. குறிப்பு: இந்த வடையை ஒரு வாரம் வரை கூட வைத்திருந்து சாப்பிடலாம். நன்றாக கரகரப்பாக இருக்க காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.