மதராஸ் சிக்கன்

வகைகள்கறி

பொருட்கள்

  • 1 கிலோ கோழிக்கறி
  • 2 பெல்லாரி வெங்காயம்
  • 3 கப் தக்காளிப்பழம்
  • 3/4 கப் நல்லெண்ணெய்
  • 2 கப் கிராம்பு
  • 1 பூண்டு
  • சிறிதளவு மல்லி இலை, மஞ்சள் தூள், உப்பு
  • 10 வற்றல்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி மிளகு
  • 2 துண்டு பட்டை
  • 2 அங்குலம் இஞ்சி
  • 15 முந்திரிப்பருப்பு
  • 1 தேக்கரண்டி சீரகம்

செய்முறை

  1. முதலில் வற்றல், கடுகு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, பின் இஞ்சி, பூண்டு தனியாகவும் முந்திரிப்பருப்புத் தனியாகவும் அரைக்கவும். கோழிக்கறியைச் சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் உப்புத் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கறித்துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும். மீதி எண்ணெயில் பெல்லாரியை வெட்டிப்போட்டு வதங்கியதும் அரைத்த மசாலா போட்டு வதக்கவும். வாசனை வந்தவுடன் தக்காளியை வெட்டிப்போட்டு, கோழிக்கறியை போட்டு பொடியாக நறுக்கிய மல்லி இலையையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி இளந்தணலில் போடவும். கறி வெந்து தண்ணீர் வற்றி சாறு புரட்டினாற் போல் வந்தவுடன் இறக்கவும்.