கொண்டைக்கடலை சுண்டல்

வகைகள்சுண்டல்

பொருட்கள்

  • 200 கிராம் கொண்டைக்கடலை
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • தலா 1 டீஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு
  • தேவையானது உப்பு
  • ½ டீஸ்பூன் பெருங்காயம்
  • எண்ணெய் (தாளிக்க)

செய்முறை

  1. கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி கடலையை கொட்டி கிளறவும். பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பரிமாறவும்.