கிங் சமோசா
கிங் சமோசா
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 125 கிராம் மைதா மாவு
- 1 1/2 தேக்கரண்டி வற்றல் பொடி
- 1/2 கிலோ உருளைக்கிழங்கு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
- 100 கிராம் பச்சை பட்டாணி
- 25 கிராம் மல்லி இலை
- 1/4 கிலோ கடலை எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட்
- சிறுதுண்டு இஞ்சி
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு
- 1 தேக்கரண்டி உலர்ந்த திராட்சை
- தேவையான அளவு உப்பு
- 2 பச்சை மிளகாய்
செய்முறை
- உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வேக வைத்த பட்டாணியுடன் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு, இஞ்சி, கரம் மசாலா, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, மல்லி இலை, பச்சை மிளகாய், சிட்ரிக் ஆசிட் எல்லாவற்றையும் கலந்து மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரித்து கலவையை வதக்கி பின்னர் ஆறவைக்கவும். பிறகு மைதா மாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெயை விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சுட்டு சப்பாத்திகளாக இட்டு ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் தண்ணீர் தொட்டு ஓரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு மீதி பொன்நிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.