
கைமா புட்டு
அசைவம்வேகவைத்த கொத்திய இறைச்சியை கரடு கல்லில் அரைத்து மசாலா, முந்திரியுடன் வறுக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்புட்டு
பொருட்கள்
- 200 கிராம் கொத்துக்கறி
- 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
- 100 கிராம் வெங்காயம்
- 15 கிராம் இஞ்சி
- 30 பல் பூண்டு
- 20 கிராம் நெய்
- 4 பட்டை
- 4 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 2 முந்திரிப்பருப்பு
- 2 முட்டை
- 3 மிளகாய்
- மல்லி இலை, மஞ்சள் பொடி, உப்பு
செய்முறை
- கறியுடன் மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு மஞ்சள், உப்பு, மிளகாய்த்தூள், போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றியதும் அம்மியில் வைத்து பரபரப்பாக அரைக்கவும். பின் சட்டியில் நெய் ஊற்றி வாசனை சாமான்களைப் போட்டு, அரைத்து வைத்திருக்கும் கறி, மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு நன்றாகக் கிளறி விடவும். கறி வறுபட்டதும் வறுத்த முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி இறக்கவும்.