கண்ட்வி-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

கண்ட்வி

சைவம்

ஆவியில் வேக வைத்து கிளறிய கடலைமாவு மாவை மெல்லியதாகப் பரப்பி சுருள்களாக உருட்டி கடுகு தாளித்து பரிமாறப்படும் குஜராத்தி சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்கலப்பு உணவு

பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 2 1/2 கப் லேசாகப் புளித்த மோர்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 அங்குலத்துண்டு இஞ்சி (அரைக்க)
  • 10 பச்சை மிளகாய் (அரைக்க)
  • 1 சிட்டிகை பெருங்காயம் (அரைக்க)
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள் (அரைக்க)
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் (தாளிக்க)
  • 1/2 டீஸ்பூன் கடுகு (தாளிக்க)
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் (மேலே அலங்கரிக்க)
  • 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை (மேலே அலங்கரிக்க)

செய்முறை

  1. கடலை மாவு, மோர், உப்பு, அரைத்த விழுது எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இந்த கிண்ணத்தை பிரஷர் குக்கர் உள்ளே வைத்து, வெயிட் வைக்காமல் 20 நிமிடம் வேக வைக்கவும் (எண்ணெய் சேர்க்கக் கூடாது).
  3. ஆறியதும் ஒரு அடிகனமான வெண்கலப் பாத்திரம் அல்லது வாணலியில் இந்த வேக வைத்த விழுதைப் போட்டு விடாமல் 7 அல்லது 10 நிமிடம் கிளறவும்.
  4. மாவைப் பதம் பார்க்க ஒரு எண்ணெய் தடவிய தட்டின் பின்பாகத்தில் சிறிது மாவைத் தடவி சுருட்டிப் பார்க்கவும். பாயைப் போல சுருட்ட முடிந்தால் சரியான பதம் வந்துவிட்டது.
  5. மத்தியில் அறுந்துவிடாமல் அழகாகச் சுருட்ட வரவேண்டும். இம் மாதிரி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி எண்ணெய் தடவிய தட்டின் பின்பாகத்தில் மாவை கையில் எடுத்து மெலிதாகத் தட்டவும். கத்தியின் உதவியால் நீள ரிப்பன்கள் போல வெட்டி உடனே பாய் போல் உருட்டவும்.
  6. எல்லா மாவையும் உருட்டி முடிந்ததும் ஒரு தட்டில் வைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகைத் தாளித்து கண்ட்வியின் மேல் கொட்டவும்.
  7. துருவிய தேங்காய், கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். குறிப்பு: மாவு சூடாக இருக்கும்போதே உருட்டவும். மாவு சூடு ஆறிவிட்டால் உருட்ட வராது.