
ஆட்டு நுரையீரல் கூட்டு
அசைவம்குக்கரில் வேகவைத்த ஆட்டு நுரையீரலை கடலைப்பருப்புடன் தேங்காய், கசகசா மசாலாவில் வேகவைக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 35 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கறி
பொருட்கள்
- 1 ஆட்டு நுரையீரல்
- 150 கிராம் கடலை பருப்பு
- ½ டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
- ½ டேபிள் ஸ்பூன் தனியா தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 டீஸ்பூன் கசகசா, சீரகம்
- 2 தக்காளி
- ¼ முடி தேங்காய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- 1 டீஸ்பூன் சோம்பு
செய்முறை
- நுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். அடுத்து வேக வைத்த பருப்பை ஒரு கொதியில் இறக்கி விடவும். கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.