
கீரை கட்லெட்
சைவம்இஞ்சி-மிளகாய் விழுதுடன் வதக்கிய முளைக்கீரையை அரைத்த கடலைப்பருப்பு, நனைத்த பிரட்டுடன் கலந்து பொன்னிறமாக பொரிக்கப்படும் கீரை கட்லெட்.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்
பொருட்கள்
- 1 கப் கடலைப் பருப்பு
- 3 வெங்காயம்
- 2 கட்டு முளைக்கீரை
- 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது
- 10 ரொட்டித் துண்டுகள்
- 5 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா பொடி
- 1 எலுமிச்சம்பழம்
- தேவையான அளவு உப்பு
- எண்ணெய் (சுடுவதற்கு)
செய்முறை
- கடலைப் பருப்பைக் கழுவி முழுகும்வரை தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் ஒரு விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும் (இல்லாவிடில் தனியாகவே அரை வேகாடு வேகும்வரை வேக வைக்கவும்).
- அரைவேகாடு வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு கரகரப்பாக அரைக்கவும் (இல்லாவிடில் சூடாக இருக்கும்போதே மத்தால் மசித்து விடவும்). வெங்காயம், கீரையைக் கழுவி பொடியாக அரியவும்.
- வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி மிளகாய் விழுது அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கீரையைச் சேர்த்து ஈரம் வற்றி, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
- கடைசியில் மசித்த பருப்பைச் சேர்த்து சில நிமிடங்கள் கலந்து விடவும். உப்பு, கரம்மசாலாத் தூள், எலுமிச்சைசாறு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ரொட்டித் துண்டங்களை ஒவ்வொன்றாக தண்ணீரில் முக்கிப் பிழிந்துவிட்டு கீரை கலவையோடு சேர்க்கவும். நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கித் தட்டி கட்லெட் போல செய்து மேலே காய்ந்த ரொட்டித் தூளால் புரட்டித் தனியாக வைக்கவும்.
- தோசைக்கல்லில் அதிக எண்ணெய்விட்டு இருபுறமும் நன்றாக சிவக்க சுட்டு எடுக்கவும். சூடாக சாஸுடன் பரிமாறவும்.
- குறிப்பு: எந்த வகையான கட்லெட்டாக இருந்தாலும் ஷேப் செய்தபிறகு 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைத்திருந்து சிறிது இறுகியபின் சுட்டால் நன்றாக இருக்கும்.