ஆட்டுக்கால் சூப்பின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

ஆட்டுக்கால் சூப்

அசைவம்

ஆட்டுக்கால் துண்டுகளை மிளகு, சீரக மசாலாவில் குக்கரில் வேகவைத்து எண்ணெய் தாளிப்புடன் முடிக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சூப்

பொருட்கள்

  • 4 ஆட்டுக்கால்
  • 2 தேக்கரண்டி சீரகம்
  • 10 சின்ன வெங்காயம்
  • 3 தேக்கரண்டி மிளகு
  • 2 தேக்கரண்டி மல்லி (தனியா)
  • 5 பல் பூண்டு

செய்முறை

  1. 4 கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 3 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி மல்லி (தனியா), 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, இவற்றை அரைத்துக்கொள்ளவும். பிரஷர் குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இத்துடன் அரைத்த மசாலா, கால் துண்டுகள், மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். விசில் சப்தம் கேட்டு 20 நிமிடங்கள் கழித்து இறக்கவும். திறக்க வந்த பின், வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால்கறியுடன் சேர்த்து கிளறவும்.